Monday, April 11, 2011

அரசியல் மாற்றம் வேண்டி..



தேர்தல் சூடு பரவிக் கிடப்பதால் இந்தப் பதிவு இங்கே பதிக்கப் படுகிறது!!

 


      "தலைவர்களின்  நா நயம் மட்டும் பார்க்காதீர்கள்; நாணயம் உள்ளதா என்று பாருங்கள்!"                   - எம்.ஜி.ஆர்


இனிக்க  இனிக்கப் பேசி  வாக்கு சேகரிக்க; இது ஒன்றும் பட்டி மன்ற மேடை அல்ல!
   
மறைந்த தலைவர்கள் போல் வேடம் அணிந்து வந்து வாக்கு கேட்பவர்களிடம்; இவ்விடம்  மாறு வேடப்போட்டி ஏதும் நடக்கவில்லை, நடக்கும் போது தந்தி அனுப்புகிறோம்!! என்று சொல்ல நா துடிக்கிறது.

இதில் இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றல்., சென்னையில் 6 மேம்பாலங்கள் எங்கள் ஆட்சியில் தான் கட்டப்பட்டது என்று சொல்லி பல்லடம் தொகுதியில் ஓட்டு கேட்பது. :-)  

மேம்பாலங்களால் பல்லட வாசிக்கு  என்ன பயன்? அவனுக்கு தெரிந்தது எல்லாம் அவன் வீட்டுக்கும் மாடசாமி வீட்டுக்குமான மூன்று ஏக்கர் இடைவெளி முழுமையும் ஒரு காலத்தில் வயக்காடு, இப்போது பொட்டக் காடு. கடந்த ஆட்சியில் இதற்கு என்ன செய்தீர்கள்? இப்போது என்ன செய்ய போகீறீர்கள்? அம்பிட்டுதேன்!!

இந்த இடதில் தான் எனக்கு ஒரு கேள்வி.! 
234 தொகுதிகளில் 123 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை காட்டினால் போதுமா? 123 தொகுதிகளிலும் பெரும்பான்மை காட்ட வேண்டாமா?

இன்னும் விளக்கமாக அலசுவோம். 

2 ,00 ,000  வாக்குகள் உள்ள ஒரு தொகுதியில் 33000 வாக்குகள் மட்டுமே வாங்கி ஒரு கட்சி வெற்றி பெற்றால் அதை எப்படி எங்களால் வெற்றியாய் பார்க்க முடியும்? (ஒரு தொகுதியில் எல்லாரும் ஓட்டு போடுவதில்லையே என்று நீங்கள் கேள்வி கேட்டால், உங்களுக்கான பதில் கீழே உள்ளது). குறைந்த பட்சம் 35 % வாக்குகளாவது வாங்க வேண்டாமா? (school, college pass mark மாதிரி)
 
ஒரு தொகுதியில், ஒரு கட்சி குறைந்த பட்ச வாக்கு எண்ணிக்கையை அடையாமல் வெற்றி பெற்றால், அது அந்த கட்சியின் பெரும்பான்மை வெற்றி என்ற கணக்கில் சேராது. அந்த வேட்பாளர் வேண்டுமானால் MLA வாக இருந்து தொலைக்கட்டும்.
 
எந்த கட்சி அதிக தொகுதிகளில் பெரும்பான்மை காட்டி வெற்றி பெற்றுள்ளதோ, அந்த கட்சியை ஆட்சி அமைக்க பணிப்போம்.


இதெல்லாம் சாத்தியமா என்றால், சத்தியமாக இல்லை!!  ஆனால் சாத்தியப் பட்டால், கீழ்க்கண்ட நன்மைகள் நிச்சயம் விளையும்!

1 . ஒரு தொகுதியின் பிரதான தொழிலை வளர்க்காத, மக்களின் வாழ்கையை முன்னேற்றாத எந்த ஒரு கட்சியும் அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை அடையாது.

2 . அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க வைக்கும் பொறுப்பை அரசியல் கட்சிகளே பார்த்துக் கொள்ளும். (நமக்கு வேலை மிச்சம்)

3 .  தமிழகம் முழுமைக்குமான  தேர்தல் களமாய் அல்லாமல், தொகுதி வாரியாக கடுமையான போட்டி நிகழும். மக்களும் கட்சியைப் பார்க்காமல் வேட்பாளர்களைக் கவனிக்க முனைவார்கள்.

4 . நடிகர்களை அனுப்பி வாக்கு சேகரிக்கும் கோமாளித்தனம் இனி எடு படாது.

பக்க விளைவிகள்:

1 . ஒவ்வொரு தொகுதிக்கு ஏற்றவாறு இலவசங்களை அறிவிக்கலாம். :-)

2 .  இப்படி கேணத்தனமா ஒரு திட்டத்தை சொன்னதால், நள்ளிரவில் நான் தூங்கும் போது என்னை கதற கதற.. கைது செய்யலாம்... (ஐயோ.. கொலை பண்றாங்க..!!)




(இந்த பதிவு, விவாதமாய் தொடங்கி வைக்கப் படுகிறது.. உங்கள் கருத்துக்களை தாராளமாய் பகிரலாம்)

இன்னும் தொடருவோம்...