Monday, April 11, 2011

அரசியல் மாற்றம் வேண்டி..



தேர்தல் சூடு பரவிக் கிடப்பதால் இந்தப் பதிவு இங்கே பதிக்கப் படுகிறது!!

 


      "தலைவர்களின்  நா நயம் மட்டும் பார்க்காதீர்கள்; நாணயம் உள்ளதா என்று பாருங்கள்!"                   - எம்.ஜி.ஆர்


இனிக்க  இனிக்கப் பேசி  வாக்கு சேகரிக்க; இது ஒன்றும் பட்டி மன்ற மேடை அல்ல!
   
மறைந்த தலைவர்கள் போல் வேடம் அணிந்து வந்து வாக்கு கேட்பவர்களிடம்; இவ்விடம்  மாறு வேடப்போட்டி ஏதும் நடக்கவில்லை, நடக்கும் போது தந்தி அனுப்புகிறோம்!! என்று சொல்ல நா துடிக்கிறது.

இதில் இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றல்., சென்னையில் 6 மேம்பாலங்கள் எங்கள் ஆட்சியில் தான் கட்டப்பட்டது என்று சொல்லி பல்லடம் தொகுதியில் ஓட்டு கேட்பது. :-)  

மேம்பாலங்களால் பல்லட வாசிக்கு  என்ன பயன்? அவனுக்கு தெரிந்தது எல்லாம் அவன் வீட்டுக்கும் மாடசாமி வீட்டுக்குமான மூன்று ஏக்கர் இடைவெளி முழுமையும் ஒரு காலத்தில் வயக்காடு, இப்போது பொட்டக் காடு. கடந்த ஆட்சியில் இதற்கு என்ன செய்தீர்கள்? இப்போது என்ன செய்ய போகீறீர்கள்? அம்பிட்டுதேன்!!

இந்த இடதில் தான் எனக்கு ஒரு கேள்வி.! 
234 தொகுதிகளில் 123 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை காட்டினால் போதுமா? 123 தொகுதிகளிலும் பெரும்பான்மை காட்ட வேண்டாமா?

இன்னும் விளக்கமாக அலசுவோம். 

2 ,00 ,000  வாக்குகள் உள்ள ஒரு தொகுதியில் 33000 வாக்குகள் மட்டுமே வாங்கி ஒரு கட்சி வெற்றி பெற்றால் அதை எப்படி எங்களால் வெற்றியாய் பார்க்க முடியும்? (ஒரு தொகுதியில் எல்லாரும் ஓட்டு போடுவதில்லையே என்று நீங்கள் கேள்வி கேட்டால், உங்களுக்கான பதில் கீழே உள்ளது). குறைந்த பட்சம் 35 % வாக்குகளாவது வாங்க வேண்டாமா? (school, college pass mark மாதிரி)
 
ஒரு தொகுதியில், ஒரு கட்சி குறைந்த பட்ச வாக்கு எண்ணிக்கையை அடையாமல் வெற்றி பெற்றால், அது அந்த கட்சியின் பெரும்பான்மை வெற்றி என்ற கணக்கில் சேராது. அந்த வேட்பாளர் வேண்டுமானால் MLA வாக இருந்து தொலைக்கட்டும்.
 
எந்த கட்சி அதிக தொகுதிகளில் பெரும்பான்மை காட்டி வெற்றி பெற்றுள்ளதோ, அந்த கட்சியை ஆட்சி அமைக்க பணிப்போம்.


இதெல்லாம் சாத்தியமா என்றால், சத்தியமாக இல்லை!!  ஆனால் சாத்தியப் பட்டால், கீழ்க்கண்ட நன்மைகள் நிச்சயம் விளையும்!

1 . ஒரு தொகுதியின் பிரதான தொழிலை வளர்க்காத, மக்களின் வாழ்கையை முன்னேற்றாத எந்த ஒரு கட்சியும் அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை அடையாது.

2 . அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க வைக்கும் பொறுப்பை அரசியல் கட்சிகளே பார்த்துக் கொள்ளும். (நமக்கு வேலை மிச்சம்)

3 .  தமிழகம் முழுமைக்குமான  தேர்தல் களமாய் அல்லாமல், தொகுதி வாரியாக கடுமையான போட்டி நிகழும். மக்களும் கட்சியைப் பார்க்காமல் வேட்பாளர்களைக் கவனிக்க முனைவார்கள்.

4 . நடிகர்களை அனுப்பி வாக்கு சேகரிக்கும் கோமாளித்தனம் இனி எடு படாது.

பக்க விளைவிகள்:

1 . ஒவ்வொரு தொகுதிக்கு ஏற்றவாறு இலவசங்களை அறிவிக்கலாம். :-)

2 .  இப்படி கேணத்தனமா ஒரு திட்டத்தை சொன்னதால், நள்ளிரவில் நான் தூங்கும் போது என்னை கதற கதற.. கைது செய்யலாம்... (ஐயோ.. கொலை பண்றாங்க..!!)




(இந்த பதிவு, விவாதமாய் தொடங்கி வைக்கப் படுகிறது.. உங்கள் கருத்துக்களை தாராளமாய் பகிரலாம்)

இன்னும் தொடருவோம்...

4 comments:

  1. இந்தத் தேர்தலில் தமிழகத்தின் 80% வாக்காளர்கள் வாக்களித்தனர். பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம். மலை வாழ் மக்கள் 17 km நடந்து வந்து வாக்களித்ததைப் பார்த்த போது தொழிற் படிப்பு படித்த எனது சமூகத்தின் பெரும்பான்மையினர் வாக்களிக்காததை எண்ணி வெட்கினேன். ஜனநாயகத்தின் அடிப்படைக் கடைமையைக் கூட செய்யாமல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதற்கு நமக்கு எந்த அருகதையும் இல்லை. எந்தப் பதவியும் இல்லாத எந்தக் குடிமகனும் செய்யக் கூடிய அயோக்கியத்தனம் violating the queue and not casting the vote. அதை என்று நாம் செய்யாமல் தவிர்கிறோமோ அன்று தான் அடுத்த கட்ட மாற்றத்திற்கான விவாதத்தைத் தொடங்க முடியும்.

    ReplyDelete
  2. அமெரிக்க சென்றுவிட்ட பலருக்கு இங்கு தேர்தல் நடந்தது தெரியுமா என்பதே பெரிய கேள்வி ...
    என்ன தான் மற்றம் வந்தாலும் ..
    அமைச்சர்களுக்கு அறிவியல் மற்றும் சமுதாய தொலை நோக்குபார்வை இல்லாத வரை நன்மைகள் விளைய போவது இல்லை ...
    உதாரணம் .... மின்சார தட்டுப்பாடு ... வளர்கிரோமோ இல்லையோ .. பேருகுகிறோம் மக்கள் தொகையில் ...
    இன்னும் ரெண்டு நாளில் அரிசி தீர்ந்து விடு அரிசி வங்கி வைன்னு சொல்கிற ஒரு குடும்பத் தலைவியின் (கவனிக்கவும் அ தி மு க அம்மா இல்லை )
    அறிவு கூட இல்லாத அமைச்சர்கள் ... எ கொ ச இ (என்ன கொடும சரவணன் இது ...)

    ReplyDelete
  3. அமெரிக்கா சென்றவர்களையும் அரசியல்வாதிகளையும் விடு நண்பா. சென்னையிலும் பெங்களூரிலும் இருப்பவர்கள் ஓட்டுப் போட்டாலே போதும். கிரிகெட் மேட்ச் பார்க்க டிக்கெட் வேண்டி வாரக் கணக்கில் அலைகிறோம். ரஜினி படத்தின் முதல் நாள் காட்சிக்காகவும் அதே உழைப்பைக் கொடுக்கிறோம். ஒரு நாள் சொந்த ஊருக்குச் சென்று ஓட்டுப் போட மட்டும் பெப்பே. அதற்கு எப்போதுமே நம்மிடம் 1008 காரணங்கள் உண்டு. உண்மையான ஒரே காரணம் - ஓட்டுப் போடுவதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் அம்புட்டு தேன். தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு - இந்த வரிசையில் தன் நடப்பையும் சேர்த்துக் கொண்டால் கவிஞரின் வசவு நமக்கே...!

    ReplyDelete
  4. என் அன்பு நண்பர்கள் மேலே குறிப்பிட்டது அத்தனையும் உண்மை. ஆனால் வாக்களிகாதவர்களின் 1008 காரணங்களில் முக்கியமான ஒன்று; எந்த குப்பைக்கு வாக்களிக்க? என்பது. இதற்க்கு ஏதாவது தீர்வு உண்டா?
    49-O நிச்சயமாக தீர்வு இல்லை நண்பர்களே. பல வாக்குச்சாவடிகளில் 49 O கொடுக்கப்படுவதில்லை, மேலும் 49-O வில் பதிவான வாக்குகள் ஒரு தேர்தலையே புறக்கணித்து விடும் என்பதும் எந்த அளவுக்கு உண்மை?
    ஆனால், ஒரு தொகுதியில் அனைத்து வாக்காளர்களும்(குறிப்பாக படித்த இளைஞர்கள் ) வாக்களிக்காமல், எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை!

    ReplyDelete